புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் சென்ற கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.நமுணசமுத்திரம் அருகே கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சென்ற கார் மீது பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில் பையாஸ், பைசல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் கார் ஓட்டுநர் காமராஜ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.