கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 66 வயதான திரேசாள், உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஒத்தபனவிளை பகுதியில் சாலையை கடக்க முயன்றவர் மீது, அவ்வழியாகச் சென்ற பைக் மோதியது. பைக்கை ஓட்டி வந்த இளைஞர் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பிய நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூதாட்டி திரேசாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி சம்பவ இடத்திலேயே பலி சாடலத்தை கைப்பற்றி குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியானது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒத்தபனவிளை பகுதியை சேர்ந்தவர் திரேசாள் 66-வயது மூதாட்டியான இவர் நேற்று மாலை உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார் ஒத்தபனைவிளை பகுதியில் வைத்து மூதாட்டி திரேசாள் கவனக்குறைவாக சாலையை கடந்ததாக கூறப்படுகிறது அப்போது பாலப்பள்ளம் பகுதியில் இருந்து குளச்சலை நோக்கி ஜெஸ்லின் என்ற இளைஞர் ஓட்டி வந்த பைக் மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டியும் இளைஞரும் தூக்கி சாலையில் வீசப்பட்ட நிலையில் வேகமாக எழுந்த இளைஞர் மூதாட்டி திரேசாளை தூக்க முயன்றார் ஆனால் மூதாட்டிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளால் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளச்சல் போலீசார் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விபத்து குறித்த பதபதைக்கும் சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.