திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற இளைஞர் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். ஆசாத் நகரை சேரந்த முகமது தவ்பிக் என்பவர் தனது பைக்கில் தம்பிக்கோட்டை ஐயப்பன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, லேசாக மழை பெய்தது. அப்போது சாலையோரத்தில் லாரி நிற்பது தெரியாமல் அதன் மீது மோதினார்.