தேனி அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து மீது பைக் மோதி பேருந்து தீப்பிடித்து ஏரிந்த விபத்தில், பைக்கில் சென்ற நபர் உடல் கருகி உயிரிழந்தார். போடேந்திரபுரம் விலக்கு அருகே தனியார் பேருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக் மோதி பேருந்திற்கு அடியில் பைக் சிக்கி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. அப்போது பேருந்தின் டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்தது. இதில், பைக்கில் சென்ற கூழையனூரை சேர்ந்த அரசாங்கம் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேறியதால் தப்பினர்.