திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க வைத்த பேனரில் விசிக தலைவர் திருமாவளவன் படத்தை கிழித்ததோடு, சாணத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டிமாங்குடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனையொட்டி விசிக சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட நிலையில், இதனை அறிந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற விசிகவினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.