கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்றைய காலக்கட்டங்களில் பெண் குழந்தைகள் மீதும் பெண்கள் மீதும் அன்றாடம் நடக்கும் பல வன்முறைத் தாக்குதல்கள் ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் பாதிப்புகளை மறுபுறம் அதிகரித்துள்ளது என்பது நிதர்சன உண்மை...அந்த வகையில் கடலூரில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாளிகை மேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் மணிகண்டனுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கூலி வேலை பார்த்துவரும் மணிகண்டனின் மனைவிக்கு கடந்த நில வருடங்களாக பார்வை சரிவர தெரியாததாக சொல்லப்படும் நிலையில் அவருக்கு உதவியாகவும், பச்சிளங்குழந்தையுடன் விளையாடுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார்.சிறுமியை கடந்த சில நாட்களாக கவனித்து வந்த மணிகண்டனுக்கு சபலம் தட்டிய நிலையில் கடந்த 2021ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனை கைது செய்துசெய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிழுவையில் இருந்த நிலையில் தற்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆயுள் தண்டனையும் , ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் சிறுமிக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.