தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தேவதானப்பட்டியில் வெள்ளி கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 75 வயதான ஆயிஷா பீவி என்ற மூதாட்டி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆயிஷா பீவியின் உடலை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.