கள்ளக்குறிச்சி அருகே சாலையோர மரத்தில் மோதி கார் விபத்திற்குள்ளானதில் 73வயது பெண் மருத்துவர் உயிரிழந்தார். தியாகதுருகம் பகுதியை சேர்ந்த தமிழரசி, உளுந்தூர்பேட்டையில் ஆசிரமம் ஒன்றில் உள்ள இலவச மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடிந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கியது.