திருப்பத்தூரில் 5 ரூபாய் நாணயம் தொண்டைக்குள் சிக்கி மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய 7 வயது சிறுமியை காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு, சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். சின்ன பொன்னேரியை சேர்ந்த லலிதா என்பவருடைய மகள் கனிஹீ, தனது பாட்டி கொடுத்த 5 ரூபாய் நாணயத்தை எதிர்பாராத விதமாக வாயில் விழுங்கினார்.