திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 7 வயது சிறுமியிடம் மனுவை பெற்று கொண்ட ஆட்சியர், உடனே நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சிறுமி அளித்த அந்த மனுவில், பூண்டி நீர் தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள பூங்காவை திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதாப், சிறுமியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.