திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆறு வயது சிறுமி தங்களது நிறுவன குளிர்பானத்தை குடித்ததால் இறக்கவில்லை என அந்த நிறுவனம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, Daily Fresh Fruits நிறுவன குளிர்பானத்தை வாங்கி குடித்ததால் பலியானதாக அவரது தந்தை ராஜ்குமார் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் குளிர்பானத்தை சாப்பிட்டு குழந்தை இறக்கவில்லை என்றும், தங்கள் நிறுவனம் மீது அவதூறு பரப்பிய ராஜ்குமார் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குளிர்பான நிறுவனம் தரப்பில் தூசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது