திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 6 வயது சிறுவனை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கடந்த 3 ஆண்டுகளாக தனது 6 வயது மகனுடன் தங்கி பணிபுரிந்து வரும் ஒடிசாவை சேர்ந்த அனிதா நாயக், அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஒடிசாவை சேர்ந்த கணு தாஸ் அவ்வப்போது மது போதையில் வேலை செய்யாமல் உறங்கி விடுவதாக உரிமையாளரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சூப்பர்வைசராக இருந்த அந்நபர் சாதாரண வேலைக்கு டி பிரமோஷன் செய்ததால் அப்பெண்ணை பழி வாங்குவதற்காக அவரது 6 வயது மகனை மயில் முட்டை காட்டுவதாக கூறி காட்டுக்குள் அழைத்துச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்தது விசாரணயில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.