கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டதால், அநியாயமாக ஒரு சிறுவனின் உயிர் பறிபோயுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வக்கிரமாரி ஏரியில், வண்டல் மண் அள்ளுவதாகக் கூறி 10 அடி ஆழத்திற்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது இந்த பள்ளங்கள் அனைத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்த சூழலில், தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த அப்துல் ஆசிம், நண்பர்களுடன் ஏரிக்கு குளிக்க சென்றான். அப்போது, ஆழம் இருப்பது தெரியாமல் சென்ற அப்துல் ஆசிம் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.இதையும் படியுங்கள் : சரித்திரப் பதிவேடு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்..!