வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தென்னை மரம் வெட்டிய போது மின் கம்பம் உடைந்தில் 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நத்தமேடு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி குமார் - ஜானகி தம்பதியின் 4 வயது மகள் நவ்யாவும், அவரது அருகே இருந்த நாயும் மின் கம்பியில் சிக்கி உயிரிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.