வேலூர் மாவட்டம் மேல்காவனூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஆபத்தான முறையில் காணப்படும் ஐந்து அடி ஆழ பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முழுவதும் மழைநீர் நிரம்பியுள்ள நிலையில், அதில் மாணவர்கள் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.