தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோம்பை ரோடு பகுதியை சேர்ந்த கூலி தொழில் செய்து வந்த மனோஜ் என்பவர்,உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வேலைக்கு செல்லமுடியாமல் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.