கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் தன்னுடைய சித்தப்பா ஓட்டி வந்த கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தான். குற்ற உணர்ச்சியில் சித்தப்பாவான சரத் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.