திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புச்சிரெட்டிபள்ளி கிராமத்தில் தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெசவுத் தொழிலாளி வேலு என்பவரது குழந்தை ஜோகித், பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்த நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மாத்திரைகளை வாங்கி வந்த தாய் சசிகலா, பாதி மாத்திரையை மட்டும் கொடுத்த நிலையில், உணவுக்குழாய்க்கு பதில் சுவாசகுழாயில் மாத்திரை சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.