திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி, பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பின் தொடர்ந்த 25 வயது மதிக்கத்தக்க நபர், சிறுமியை ரயில் நிலையம் அருகே உள்ள மாந்தோப்பிற்குள் தூக்கி சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்தான்.