திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்த ஒடிசா மாநில தம்பதியின் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுவனை நாய் கடித்த நிலையில் அதற்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால், நாட்டு மருத்துவம் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.