சேலம் மாவட்டம் இருப்பாளி காட்டுவளவு அருகே அங்கன்வாடி மையத்தில் உடல் எடை பார்க்கும்போது தொட்டில் கழன்று விழுந்து பெண் குழந்தை காயம் அடைந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மணிகண்டன்-கஸ்தூரி தம்பதி, இரட்டை பிறவியான தங்களது 2 மாத பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, அங்கன்வாடி மையம் சென்றபோது இந்த விபரீதம் நடைபெற்றது.