நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கருவை கலைக்க மருந்து சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து, கர்ப்பத்துக்கு காரணமான காதலனை போலீஸார் கைது செய்தனர். பிளஸ் டூ படித்து வந்த பருத்திப்பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, புதுச்சத்திரம் நவனி பகுதியை சேர்ந்த உறவினர் அரவிந்த் என்பவரை காதலித்து வந்த நிலையில், தகாத உறவு காரணமாக கர்ப்பமடைந்தார். எனவே, பெற்றோருக்கு பயந்து கருவை கலைக்க மருந்து சாப்பிட்ட நிலையில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.