விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அருவியில் குளித்து கொண்டிருந்த 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ராஜபாளையம் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சக்தி மகேஸ்வரன், தனது தாய்மாமாவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ராக்காச்சி கோவில் மீன் வெட்டி பாறை அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி சக்தி மகேஸ்வரன் உயிரிழந்தார்.