திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 50 ஆண்டு சிறை தண்டனை விதித்து விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தர்மராஜ் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு, 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டார். இ்ந்த வழக்கு மீதான விசாரணை விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.