வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த 15 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வி.கோட்டை சாலை சிவராஜ் நகர் பகுதியில் மலைப் பாம்பு நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.