சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கார்த்திக் என்ற சிறுவன் அங்குள்ள அங்கன்வாடி மையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பத்திலிருந்து அறுந்து விழுந்த மின் வயர் ஒன்று எதிர்பாராத விதமாக சிறுவன் மீது விழுந்ததில், அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரியின் அலட்சியத்தால் சிறுவன் பலியானதாகவும், மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.