செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் அதிவேகமாக வந்த கார்,சாலையோரம் தேநீர்க்கடையில் நின்றிருந்த 12ஆம் வகுப்பு மாணவன் மீது மோதியதில் 2 கால்களும் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தையூர் பாலமா நகரில் உள்ள தேநீர்க்கடையில், கோமான் நகரை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஜோஸ்வா நண்பர்களுடன் நின்றபோது அதிவேகமாக வந்த கார் மோதியதில், மாணவனுக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய இருவர், காரை விட்டு விட்டு தப்பி ஓடிய நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.