திருச்சி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். உப்பிலியபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.