திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஆட்டோவில் பள்ளி மாணவர்களை வைத்து 10 வயது சிறுவன் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மறவப்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, 10 வயது மதிக்கத்தக்க சிறுவன், ஆட்டோவில் அமர வைத்து தாடிக்கொம்பு சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றான். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இதை பார்த்த பலரும், சிறுவனிடம் ஆட்டோவை ஒப்படைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.