கட்டுமஸ்தான உடலை பெறலாம் எனக் கூறி, 10-ஆம் வகுப்பு மாணவனை ஏமாற்றி 3 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் நகை பறித்ததோடு, கொடூரமாக தாக்கிய பிளஸ்2 மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ((மகரிஷி இன்டர்நேஷனல்)) பள்ளியில் படிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவருக்கும், பிளஸ் 2 மாணவருக்கும் பள்ளி பேருந்தில் வரும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பிளஸ் 2 மாணவரின் கட்டுமஸ்தான உடலை பார்த்த 10-ஆம் வகுப்பு மாணவர், தனக்கும் இதே மாதிரி உடலமைப்பு வேண்டும் என கேட்டுள்ளார். இதை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்ட பிளஸ் 2 மாணவர், தனது நண்பருடன் சேர்ந்து ஏமாற்றினார்.