இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்கு பிறகு, அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை மெரினாக்கடற்கரையில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்தப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை தாம்பரத்தில், இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 92 ஆவது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நடத்தப்படும் ஏர்ஷோவில் 72 விமானங்கள் பங்கேற்கும் என்றும் தெரிவித்தார்.