மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணையில் இருந்து 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.