கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் 9 சவரன் நகையை பறித்து சென்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கலை சேர்ந்த மல்லிகா என்ற 69 வயது பெண்மனி மாசாணியம்மன் கோயில் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மூவரை கைது செய்தனர்.