தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 புள்ளி 54 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 102 புள்ளி 92 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், ஈரோட்டில் 101 புள்ளி 84 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், நாகையில் 101 புள்ளி 66 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.