தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்த நாமக்கலில் இருந்து வந்தவர்களின் வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதகுடி அருகே விபத்தில் சிக்கியதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி கிராமத்தை சேர்ந்த 9 பேர் தியாகி இமானுவேல் சேகரனார் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வாகனத்தில் சென்றனர். கமுதகுடி அருகே வந்தபோது கட்டுபாட்டை இழந்த வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைகாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\