நடுக்கடலில் படகு பழுதானதால் இலங்கையின் எல்லைக்குள் சென்ற நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் உரிய அனுமதியுடன் நாகை அழைத்து வரப்பட்டனர். கடந்த 29 ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் படகு இஞ்சின் பழுது காரணமாக காற்றின் திசையில் படகு இலங்கை முல்லைத்தீவு கடற்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து இலங்கை கடலோர பாதுகாப்புப்படைக்கு தகவல் தெரிவித்து உரிய அனுமதி பெற்று மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்.