தேனி மாவட்டம் கம்பத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துடன், 4 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒரு குழு காரில் சபரிமலைக்கு சென்று விட்டு கம்பம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணித்த ஐந்து பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், 8 வயது சிறுவன் சித்தார்த்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிறுவன் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.