சென்னையில், நேற்று ஒரே நாளில் 3,000 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில், இன்று அக்டோபர் 29ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.135 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,210க்கு விற்பனை ஆகிறது.தமிழகத்தில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்படுகிறது. இம்மாதம், 17ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 12,200 ரூபாயாகவும், ஒரு சவரன், 97,600 ரூபாயாகவும் அதிகரித்தது. கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக். 27) ஒரு கிராம், 11,450 ரூபாய்க்கும், ஒரு சவரன், 91,600 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (அக். 28) காலை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 150 ரூபாய் குறைந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிவடைந்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று பிற்பகலில், மீண்டும் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு, 3,000 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், இன்று (அக். 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து ஒரு சவரன் ரூ.89,680க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.135 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,210க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் ரூ.166க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து, மீண்டும் அதிர்ச்சி தந்துள்ளது. இதையும் பாருங்கள்... மீண்டும் உச்சம், ஏறுமுகத்தில் தங்கம் விலை | Gold Rate | Gold Rate Today | Gold Price