விருத்தாசலத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்று விற்பனை செய்து வந்தவரை போலீசார் கைது செய்து, 87 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகரில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை சேர்ந்த குமரவேல் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.இந்தநிலையில், போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, குமரவேல் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்தபோது, 50 கிலோ எடை கொண்ட 87 மூட்டை ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.நாமக்கல் மற்றும் கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.