திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, பெங்களூருவுக்கு கடத்த இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 820 செம்மர கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கொடும்மாம்பள்ளியை சேர்ந்த சேகர் என்பவர், ஆந்திராவில் இருந்து செம்மரக் கட்டைகளை பெங்களூருவுக்கு கடத்தவிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காக்கனாபாளையம் பகுதியில் சேகருக்கு சொந்தமான பம்பு ஷெட்டில் சோதனை செய்த வனத்துறையினர் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றினர்.