ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையில் விநாடிக்கு சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ள நிலையில், மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறையை கொண்டாட கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.