ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 8 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரக்கோணம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அதே பகுதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.