திருச்சி மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் போதை பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்த மெத்தபெட்டமைன், சோடியம் குளோரைடு, ஊசிகள், செல்போன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்ய பயன்படுத்திய கொரியர் நிறுவனத்திற்கும் போலீசார் சம்மன் அனுப்பினர்.