காஞ்சிபுரம் மாவட்டம் ஊத்துக்காடு டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றதாக 8 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பேர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுபிரியர்களிடம் கூடுதல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியரை தவிர, மற்றவர்கள் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.