விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பைக்கில் வந்த கொரக்கன்தாங்கள் கிராமத்தை சேர்ந்த கிரண் குமார் என்பவரை பிடித்து நடத்திய விசாரணையில், அவரும், தியாகதுருகத்தை சேர்ந்த சங்கர் என்பவரும் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.