சேலத்தில் 7 வம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 11ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்புகளை முடித்துவிட்டு மாணவர் ஒருவருடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பள்ளியை சேர்ந்த மேலும் இரு மாணவர்களுடன் சேர்ந்து, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் கிடைக்கப்பெற்றதை அடுத்து ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் மூன்று மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.