கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் விநாயகர் சிலையை கரைப்பதற்கு குளத்தில் இறங்கியபோது எதிர் பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆனத்தூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் ஆதிகிருஷ்ணன், தனது வீட்டில் இருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்காக அருகிலுள்ள ராமர் குளத்திற்கு 5 நண்பர்களுடன் சென்றுள்ளார்.அப்போது சிலையை கரைப்பதற்காக குளத்தில் இறங்கிய சிறுவன் ஆதிகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.