செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் 75 மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தார். மதுராந்தகம் நகராட்சி செங்குந்தர்பேட்டை அருளால் ஈஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வந்த மூதாட்டி மாதவி, மகன் பிரகாஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தீப்பிடித்தது.