திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நண்பரை மீட்க சென்று, கடைசியில் ஆற்றின் நடுவே மணல் திட்டில் சிக்கிக்கொண்ட 7 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட முபாரக், அவரை மீட்ட நண்பர்கள் என ஏழு பேரும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த நிலையில், தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டனர்.