சென்னை பூந்தவல்லியில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சக்தி நகரை சேர்ந்த குமார் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்திய சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து இந்த விபத்து ஏற்பட்டது.